After a long gap, i am coming back again.
It's all due to my exit from the railways.
i can have more furious blogs from tomorrow on the dirty collapse of international diplomacy in solving the syrian issue. it is a nonsense waiting for international community to take bold step in genocide unleashed upon the tamils by the majority sinhalese. let us do something which must boil the blood of inert UN and the tricky indian diplomacies.
Sunday, March 4, 2012
Thursday, January 26, 2012
lost the faith in global justice system
i have fast been losing my trust on international justice system
Monday, August 1, 2011
| |
“கொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்போரில் பங்கேற்ற படைஅதிகாரியின் பதறவைக்கும் வாக்குமூலம் [ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 01:02 GMT ] [ கார்வண்ணன் ]
சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.
அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“நான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைக்கிறேன். அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன்.
அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.
இவற்றையெல்லாம் நான் எனது கண்களால் பார்த்தேன். சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டேன்.
பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர்.
நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள். அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை எனது கண்களால் பார்த்தேன்.
தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.
அந்தக் குழந்தையை நான் இந்தக் கைகளால் தூக்கினேன். தாயார் கதறி அழுதார். அந்தத் துன்பத்தின் மத்தியிலும் என்னை நன்றியுணர்வோடு பார்த்தனர்.
ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை எனது கண்களால் கண்டேன்.
தான் ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறேன்.
ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும்.
அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.
போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.
இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.
அவர்களை என்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும்.
தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை நான் கண்டேன்.
இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை.
போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.
புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை நான் கண்டேன்.
அவை அனைத்தையும் அவர்களால் அடக்கம் செய்ய முடியவில்லை. அவற்றை ஒன்றாக அடுக்கி புல்டோசர் மூலம் மண் பரப்பி ஒரு அணைபோல அமைத்து அவை புதைக்கப்பட்டன.
புதுமாத்தளனில் 1500 சடலங்களை நான் கண்டேன். ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
போரின் இறுதிக்கட்டத்தில் நான் கடைசியாக நுழைந்த போது புதுமாத்தளன் பகுதி முழுவதும் சடலங்களாக நிறைந்திருந்தது.
அவற்றை அழிப்பதற்கு அவர்களுக்கு பாரிய வாகனம் ஒன்றைப் பெற்றனர். சடலங்களின் மீது மண்ணைப் போட்டு நிரப்பினார்கள்.
சில இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாதளவுக்கு அழிந்து போன உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசும்.
அவர்கள் வெறும் அப்பாவி குடிமக்கள். போரிடும் தரப்பினருடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்.
அவர்களின் இறப்புக்காக தான் அழுகிறேன். இப்போது அதை வெளியே சொல்ல முடிவு செய்துள்ளேன்.
ஏனென்றால் 2009 மே மாதம் கடற்கரையின் ஒரு சிறு துண்டுப் பகுதிக்குள் நடந்த கொடூரமான குற்றங்கள் குறித்து உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் நன்றாக இருக்கிறேன்.நான் பல சடலங்களைப் பார்த்துள்ளேன். காயமடைந்தவர்கள் பலரைப் பார்த்துள்ளேன். பல வன்புணர்வுக் காட்சிகளைக் கண்டுள்ளேன்.
the tortoise race
சீ.பி.எம். திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போட காரணம் என்ன?
நாளை அதாவது ஜூலை 30 ஆம் நாள் சென்னையில் “இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்ன?” என்பதாக ஒரு மாநாடு போடுகிறார்கள். இது என்ன மார்க்சிஸ்டுகளுக்கு புது அக்கறை என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அந்த பிரச்னையை “ஆய்வு” செய்துகொண்டு இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்டு என்றால் மற்றவர்களைப்போல உடனடியாக ஒரு தீர்வை நம்புவதும், அதை பரப்புவதும், அதையே நடைமுறைப்படுத்த துணிவதும் முடியுமா என்ன? நிதானமாக அங்கே இருக்கும் வர்க்க சக்திகள் பற்றி ஆய்வு செய்து, அதன்பிறகு அங்கே இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியிடம் கருத்து கேட்டு, பிறகு அந்த பிரச்சனையில் , கம்யுனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கும் அருகாமை நாடுகளின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு, பிடகு உலக நாடுகள் மத்தியில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, எக்கதிபத்தியங்கள் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்று கவனித்து, கடைசியாக தாங்கள் வாழும் நாட்டின் அரசு என்ன சொல்கிறதோ அடஹ்ர்கு விரோதம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டாமா?
மூச்சு விடாமல் இத்தனை விவரங்களையும் சேர்க்கும் மார்க்சிசிடுகள், அதை தங்கள் “அரசியல் தலைமைக் குழு” விடம் காட்டி, அவர்கள் பொதுச்செயலாளரின் நேரடிப் பார்வைக்கு வைத்த பிறகு, அவர்கள் அத்தனை கருத்துகளையும் “தொகுத்து எழுதி” பிறகுதானே கட்சி முடிவு செய்ய முடியும்? அப்படி எடுக்கும் முடிவும் “தப்பித் தவறி” கூட, “தெலுங்கான” பிரச்சனை பற்றி குழப்பம் ஏற்பட்டது போல, ” மேற்கு வங்கத்தில் “கூர்காலாந்த்” பிரச்சனை மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போட்டு, “மாநில ஒற்றுமையை ” காப்பாற்றியது போல , “பிரிவினைவாதம்” தலைதூக்க அனுமதிக்க கூடாது அல்லவா? அட. மார்க்சிசிடுகளே, நீங்கள் “தெலுங்கானாவில்” எடுத்த முடிவான, “ஒன்றுபட்ட ஆந்திரா” என்பது தெலுங்கான தவிர்த்த, ராயலசீமா, கடலோரம் ஆகிய ஆந்திராவின் பாணனை திமிங்கிலங்களுக்கு, அதாவது ரெட்டிகளுக்கும், கம்மா நாயுடுகளுக்கும், தெலுங்கானா பகுதியில் நிலங்களை ஆதிக்கம் செலுத்தவே உதவும். அதனால்தான் அங்கே ” தெலுங்கானாவை ஆதரிக்கும் மாவோவாதிகள்” செல்வாக்கு உயர்கிறது.
தோழர்களே நீங்கள் மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் ஒற்றுமையை கட்டிக் காக்க எண்ணி, “கூர்காலாந்து ” மக்களின் நியாயமான உரிமையை மறுத்துவந்ததால், இன்று மம்தா அதையே ஆயுதமாக்கி, “அதிக சுயாட்சியை கூர்காலாண்டுக்கு” வழங்கி நற்பெயர் பெற்று விட்டார். இது இன்றைய கதை. நேற்று அதாவது 1978 ஆம் ஆண்டு, முழு அஸ்ஸாம் மாநிலமும் “மாணவர் எழுச்சியில்” எழுந்த போது, நீங்கள் அதை எதிர்த்து நிலை எடுத்ததால் உங்களை அந்த மாநிலத்தை விட்டே மாணவர்கள் எழுச்சி விரட்டி அடித்ததே நினைவு இருக்கிறதா? இவாறு எங்கெல்லாம் “சுயாட்சி முழக்கம்” எழுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு, அதை நீங்கள் எத்ரித்து வருகிறீர்கள். அதுதான் உங்கள் வரலாறாக இருக்கிறது. “உழைக்கும் மக்களின் ஒற்றுமை” எண்பதை பிரிவினைவாதிகள் உடைத்து விடுவதாக கற்பனைக் கதையை அவிழ்த்துவிடும் நீங்கள் “அடக்கப்படும் தேசிய இனங்களையோ, அடக்கப்படும் பிரதேச மக்களையோ, அதிகாரப் பரவலாக்குதளுகாக போராடும் மக்களையோ கண்டுகொள்வதில்லை. அதன்விளைவு அந்த குறிப்பிட்ட மக்களிடமிருந்து நீங்கள் “தனிமைப்படுவதைதவிர” வேறு வழியில்லை.
இப்போது இலங்கை பிரச்சனை எண் உங்களுக்கு “முக்கியமாக” படுகிறது? இன்று “தமிழ்நாடு “விழித்துக் கொண்டுள்ளது. நீங்கள் இருக்கும் “கூட்டணிதலைமை” இலங்கை விசயத்தில் ஒரு முடிவை எடுத்து உள்ளது. இலங்கை தமிழருக்காக பேசுகிறது. ராஜபக்சே உலக அளவில் “போர்க்குற்றவாளி” என்று அம்பலப்பட்டு கிடக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் கூட “ஹெட்லைன்ஸ் டுடே” வெளியிட்ட “சேனல் நாலு” பகிரங்கமாக போர்குற்றம் பற்றி மக்களிடம் எடுத்து சென்று விட்டது. ஆதியோ ஒட்டி மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. .மார்கிசிடுகளின் தோழர்களாக கருதப்பட்ட “ஜேவிபி கட்சிகூட” தேர்தலில் தோற்று விட்டது. அதனால் தாங்களும் ஏதாவது தமிழருக்கான தீர்வு என்று கூறவேண்டிய கட்டாயம். இல்லாவிடில் சீ.பி.ஐ. என்ற மற்றொரு இடதுசாரி கட்சி, “தமிழருக்கு ஆதரவாக” செல்வது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். அதனால் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்க சீ.பி.எம். இறங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.
அதனால்தான் தோழர்களே, நீங்கள் லெனின் “தேசிய இனங்கள்” பற்றி கூறியதை படியுங்கள். ஸ்டாலின் ” தேசிய இன சுதந்திரம்” பற்றி சொன்னதை செவி மடுங்கள். “பிரிந்து செல்வதற்கான் ஆரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை” என்ற சொற்கள் உங்கள் கண்களுக்கு புலப்படட்டும். அதை “ஈழத் தமிழர்கள்” எப்படி பெற முடியுமோ அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆயுதம் தாங்கிய போறோ, அரசியல் ரீதியான போராட்டமோ, எதுவானாலும் அடக்கப்படும் சிறுபான்மை தேசிய இனத்திற்கு “பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை” மட்டுமே விடுதலை வாங்கித் தரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை அந்த நாட்டு ஈழத் தமிழ் குடிமக்கள் “தமிழீழம்” மூலம் பெற்றுக்கொண்டாலும் அது அவர்களது வழி என்று கூறி குறுக்கே நிற்காதீர்கள். இன்று உலக அரங்கில் “ஏகாதிபத்தியத்தின் வளர்ந்த வடிவமான வல்லரசுகளுக்கு எதிரான சக்தி தேசிய இனங்கள்” தான் எண்பதை உணருங்கள்.
Sunday, May 29, 2011
why Sri lanka be divided?
sri lanka must be divided in to two sovereign states,one for LTTE controlled tamils regions and another for sinhala government controlled regions. it is the only solution and should be done very immediately before it turns into a state of total sinhalification. - S.MUTHU RAMAN
Tuesday, April 12, 2011
the dirty protocol
உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் !
12 April, 2011 by admin 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின்போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் சரணடையலாம் எனவும், சரணடைவதற்கு ஏதுவான சூழ் நிலையை தாம் தோற்றுவித்ததாகவும், ஏற்பாட்டாளராக இருந்த இந்திய, நோர்வே மற்றும் ஐ.நா அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோர் தெரிவித்ததை அடுத்தே அரசியல்துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்கள் சரணடைந்தார். ஆனால் அவரையும் புலித்தேவனையும், கட்டிவைத்து இராணுவத்தினர் மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவு சித்திரவதைகளை மேற்கொண்ட பின்னரே கொலைசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.
முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இறந்த பின்னர் உடலத்தை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
மேற்படி எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை நாம் ஐ.நா வுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் ஆதாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.
சமாதானச் சூழல் ஒன்றை உருவாக்குமாறும், போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும், ப.நடேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரக்கமற்ற கலைஞர் அரசும், மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரசுமே, இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மறுத்துள்ளது. அதனால் நடந்த பேரவலத்தில் பெருந்தொகையான புலிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் இறந்துள்ளனர். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் !

source:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1422
முதலில் ப.நடேசன் அவர்களின் மனைவி கொலைசெய்யப்பட்டதாகவும், பின்னர் கடும் சித்திரவதைகளின் பின்னர் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பால் சுட்டுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களை இராணுவம் கட்டிவைத்து கொடுமைசெய்த காயங்கள் அவர் உடலில் காணப்படுகிறன. இறந்த பின்னர் உடலத்தை எடுத்துச் சென்று புதைக்க இருந்த இடத்தில் நின்ற இராணுவத்தினரால் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
மேற்படி எமக்கு கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை நாம் ஐ.நா வுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரிடமிருந்து தமிழக முதலமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், ராஜ்ய சபா உறுப்பினருமான கனிமொழி ஊடாகவே குறித்த கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் ஆதாரபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.
சமாதானச் சூழல் ஒன்றை உருவாக்குமாறும், போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும், ப.நடேசனால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரக்கமற்ற கலைஞர் அரசும், மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரசுமே, இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க மறுத்துள்ளது. அதனால் நடந்த பேரவலத்தில் பெருந்தொகையான புலிகள் மட்டுமல்ல, பொதுமக்களும் இறந்துள்ளனர். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை ஒருபோதும் மன்னிக்கமாட்டான் !
Friday, March 4, 2011
trying times for ceylon tamils
After the final onslaught on the tamils during the 2009, the real and scientific methods of terminating the voices for tamils rights have been executed in full force by the sinhalese majority government and army. the grave mistake of the US and the congress government in india have empowered the genocidal sinhalese with every vestiges for demoralising the struggle for tamils rights in the island. both the asiatic power and the world power will have to pay back in double fold for each sin committed until today against the tamils in ceylon. it is unavoidable.
Subscribe to:
Comments (Atom)