இந்தியா சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறதாம். இதுதான் சமீபத்திய செய்தி. எதற்காக அய்யா ஆயுதமா கொடுத்து உதவுகிறீர்கள். வேறொன்றுமில்லை. இப்போது சிங்களர்கள் தங்களைத்தாங்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என்றா?
Thursday, December 30, 2010
மெள்ள அழிந்துபடும் இலங்கை தமிழின கலாசாரம்- மீண்டும் திரும்பிய வரலாறு
சிங்களராஜ வம்ச கடைசி மன்னரின் புதிய பிரச்சினைகள்
மனிதநேயமற்ற கும்பலின் அதிபரான ராஜ பிச்சை இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்றதிற்கு காரணம் ஏதோ புத்த மதக்கொள்கைகளை பரப்புவதற் காகவோ அல்லது உலக வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காகவோ என்றெண்ணிவிடாதீர்! சிங்கள இன ஆணவ வெறிக்கு இரையாகாமல் தப்பிக்க, இங்கிலாந்தில் குடிபுகுந்த தமிழர்களை எப்படியாவது சீண்டிப்பார்ப்பதும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் வேதனை வடுக்கள் எந்த அளவுக்கு ஆழமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆழம் பார்ப்பதே அப்பெருமகனாரின் முக்கிய நோக்கம். இது போன்ற ‘உயர்ந்த’ சிந்தனைகளை நாம் குப்பைதொட்டியிலோ அல்லது அதன் அருகே உள்ள ஜீவராசிகளிடம்தான் காண இயலும்.
அடித்துவிட்டு நான் அடிக்கவேயில்லை என்ற ரீதியில் தாந்தோன்றித்தனமாக பேசி தனது ஆதரவாளர்களை குஷிப்படுத்துவதில் மிகவும் தேறியவர்தான் இந்த மகாராஜ பிச்சை. ஈழப்போரின் இறுதிவாரத்தில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேருக்கும் அதிகமான குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என்று அப்பாவி மக்களை கொன்று குவித்துவிட்டு, எனது தலைமையிலான சிங்கள இனவெறி ராணுவம் அப்பாவிப்பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை என்று சொல்கிறார். இது, யாரையோ திருப்திப்படுத்தி யாரையோ முட்டாளாக்க செய்யப்படும் முயற்சி என்பதையும், வெற்றிவெறி தலைக்கேறி மனிதநேய ஆர்வலர்களை சீண்டிப்பார்க்கும் அளவுக்கு அவருக்கு இருக்கும் கிராம் கணக்கிலான மூளையும் பிசகிவிட்டது என்பதையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
‘நவீன அரிசந்திரன்’
1983-ல் நடைபெற்ற சிங்கள அரசின் தமிழர் மீதான படுகொலைதாக்குதலில் சுமார் 5000 பேருக்கும் அதிகமான அப்பாவிகள் இறந்தனர். பிறகு இந்திய அமைதிப்படையுடனான (?) சண்டையில் 4000 பேர்வரை மருத்துவர், செவிலியர், படித்தவர், படிக்காதவர் என தமிழர்கள் மானாவாரியாக உயிரை விட்டனர். சுதந்திர ஈழத்துக்கு எதிராக சர்வதேச சமுதாயம் நடத்திய இறுதியான போரில் சுமார் 4000 போராளிகளும், 40,000-த்திற்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர். போருக்குப்பின் வடஇலங்கைக்கு இரும்புத்திரை போடப்பட்டு படுகொலைகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், போர்குற்ற விசாரணை என்று பேச்சு அடிபட்டபின் புத்தர்வழி வந்த மகானாகிய ராஜ பிச்சை விடுதலைப்போராட்ட ஒழிப்பின்போது பொதுமக்கள் யாரும் கொல்லப்பட வில்லை என தனது கோயபல்ஸின் இழிவாயை இரவல்வாங்கியிருப்பது, தனிமனிதனாக அவர் சத்தியத்தின் பொருளறியாமலிருக்கலாம். ஆனால், ஒரு தேசத்தின் தலைமைப்பொறுப்பில் அமர்ந்து கொண்டு உலகநாடுகளை ஏமாற்ற முயற்சிப்பதன்மூலம், கொஞ்சம் நஞ்சம் மீதியிருந்த இலங்கையின் இறையான்மையை கொன்று புதைத்துவிட்டார் என்பதுவே உண்மை.
சிங்களமயமாக்கல் - மீண்டும் பிறந்திருக்கும் ஹிட்லரிஸம்.
சிறு புழுகூட தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்கு எதிர்த்தாக்குதல் நடத்த துணிவதை animal instinct என்கிறோம். மனிதனும், தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது தற்காப்புக்காக திருப்பி தாக்குவதை சர்வதேச சட்டங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் தற்காப்புக்காகக்கூட எதிர்த்தாக்குதலில் ஈடுபடாத தனது அப்பாவிக்குடி மக்களின் மீதே மனிதநேய மற்ற வகையில் ரசாயன குண்டுமுதல் கொத்து குண்டுவரை வீசி எறும்புகளை காலால் நசுக்குவதுபோல் அழித்துவிட்டு நான் யாரையும் கொல்லவில்லை என்று பொய்யுரை செய்வது சிங்கள பேரினவாதிகளுக்கே உரிய குணம் என்று உலகம் புரிந்து கொண்டாலும் வாய் மூடி மௌனிப்பது ஏன் என்று புரியாமலில்லை. தமிழர்கள்,சிங்களர்கள் என தனித்தனியே இருந்தால்தானே பிரச்சினை எனவும் ‘அறிவியல் ரீதியாக’ இவர்கள் இருவரையும் எப்படி ஒரே இனமாக்குவது எனவும் ராஜபிச்சை தீவிரமாக யோசித்ததன் விளைவே வடக்கில் [கிழக்கில் எதிர்ப்பு இல்லை மாறாக துணைபோகிறகும்பல்களே கிழக்க்ன் அதிகாரமையத்தின் ஆணிவேர்களாக திகழ்கின்றன] சிங்களமயமாக்கலை துரிதமாக அமல்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட ஹிட்லர் எப்படி யூதர்களின் உடலிலிருந்து சோப்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றை தயாரித்தானோ அதற்கு ஒப்பாக இவருடைய மூளைவேலை செய்வதிலிருந்து இவர் ஒரு சர்வாதிகாரியாக பரிணமித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஹிட்லர் சுத்தமான ஆரியவழித் தோன்றல்களை உருவாக்க சோதனைச்சாலைகளை பயன்படு த்தினான். ராஜ பிச்சையோ தேச ஒற்றுமை என்று கூறிக்கொண்டு புத்திசாலித்தனமாக வெளிப் படையாகவே அதை செய்கிறார். அதாவது வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது.
சிங்களமயமாக்கலுக்கு சர்வதேச சமுதாயத்தின் மறைமுக அனுமதி
ஓர் இனத்தின் கலாச்சார கூறுகளை அழிக்கும் அடிப்படையிலான தவறுகள், அதிகாரவர்க்கத்தின் அடி மட்டத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்திருந்தால் மன்னிக்கப்படலாம். ஆனால், கலாசார ஒழிப்பை வெளிப்படையான அறிக்கை விட்டே செய்யத்துணிவது பேரின கும்பல்களின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ராஜ பிச்சை சகோதரர்கள் அல்லவா? ராஜ பிச்சை தலைமையிலான சிங்கள இனவெறியர் கூட்டத்தின் இந்த அப்பட்டமான காய்நகர்த்தல் களையெல்லாம் சர்வதேச சமூகம் பெரியதாக கண்டுகொள்ளவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை. மாறாக, ஆதரவையே வாரி வழங்கிவருகிறது. காரணம், நைந்துபோன ராஜதந்திர கொள்கைகளே. ஈழப்போருக்குப்பின் இனவெறி சிங்கள ராணுவ அதிகாரிகளும் அதன் தற்காலிக கூட்டாளிகளும் விடும் அறிக்கைகள் மூலம்தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி உலகம் அறிய முடிகிறது. நடுநிலை அமைப்புகளுக்கோ அல்லது பத்திரிக்கையாளர்களுக்கோ அங்கே அனுமதியில்லை என்பதெல்லாம் எதற்காக? ஒரு படி மேலே போய் இனி சிங்கள மொழியில்தான் தேசியகீதம் என்ற அவசரகோலத்தில் ஒரு அறிக்கை. தமிழக முதல்வர் அதை எதிர்த்து கணடனம் தெரிவித்த பிறகு அதே வேகத்தில் அதை திரும்பி பெற்றார் சிங்கள மகாராஜா. சென்ற வருடம் போர் முடிவடைந்துவிட்டது என்று கூறி வெற்றிவிழாவெல்லாம் கொண்டாடிய ராஜபிச்சை கடந்த வாரம் ராணுவ பயிற்சி நிறைவு விழாவின்போது போர் இன்னும் நிறைவடையவில்லை என்று உண்மையை போட்டு உடைத்தார். ஆக, உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், புலம்பெயர் தமிழர்களும் மற்றும் இணைய தளங்களும் கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மை என அவரே உறுதிப்படுத்திவிட்டார். இனியும் காலம் தாமதியாது, வடக்கு கிழக்கு பகுதிகள் ஐ.நாவின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். போர் முடிவடைந்த நாளிலிருந்து நடைபெற்ற மனித உரிமைமீறல்கள் விசாரிக்கப்படவேண்டும். இலங்கைத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும். காலம் தாமதிப்பது, தமிழர் பகுதிகளில் அப்பட்டமான, உறுதியான மனித உரிமை மீறல்களில் சிங்கள இனவெறிசக்திகள் திட்டமிட்டு செயலாற்றிவர ஐ.நா மற்றும் ஆசியாவின் ஆதிக்க சக்திகள் கொடுத்துக்கொண்டிருக்கிற மறைமுக அனுமதி என்பதுபோல் ஆகிவிடும்.
ஐக்கிய நாடுகளின் சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் எதற்கும் அசைந்து கொடுக்காமலிருந்தாலும் தொடர் கண்டனங்களும் போர்குற்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் குவிந்தவண்ணம் இருக்கத்தான் செய்கின்றன. விசாரணை மன்றம் நியமிக்கப்படுவதற்குள் தமிழர்ப்பகுதிகள் முழுதும் சிங்களமயமாக்கப்பட்டுவிடும். இந்த சிங்கள மயமாக்கலுக்கு கடல்கடந்து வாழும் தமிழர்களிடமிருந்து வரும் எதிர்ப்புகளை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள். காரணம் அவர்கள் போராளிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என முத்திரைக்குத்தி ஒதுக்கப்படுவர். வட இலங்கையில் சிங்களமயமாக்கலுக்கு எந்த எதிர்ப்பும் யாரும் காட்டிவிடமுடியாது. துணிந்தால் சித்திரவதைக்குள்ளாகி உயிரை விட வேண்டியதுதான். இதே நிலை நீடித்தால் வட இலங்கை, இன்னும் சில மாதங்களில் இலங்கையின் உள்நாட்டு பொழுதுபோக்கு மையமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் நிலையை தவிர்க்க முடியாது.
யார் உண்மையான போர்குற்றவாளிகள்?
அப்பாவி பொதுமக்களின் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் ஒருசேர கட்டவிழ்த்துவிட்ட சிங்கள ராணுவத்திற்கு, இனப்படுகொலைகளை தொடர்ந்து நடத்துமாறு பச்சைக்கொடி காட்டிய சர்வதேச சமுதாய அமைப்பை சேர்ந்த குறிப்பிட்ட சிலரை முதலில் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கையில் மக்களாட்சி நடக்கிறது என்று எந்த நாடாவது சொன்னால், இலங்கையின் இறையாண்மையை மதிக்கிறோம் என்று எந்த நாடாவது அறிவித்தால் அந்த நாடு தன் மதிப்பை உலக அரங்கில் இழப்பது திண்ணம். சமீபத்திய நிகழ்வுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. தர்மத்தை சூது கவ்வியதும் உண்மை. தர்மம் மீண்டும் வெல்லத் துவங்கியிருப்பதும் உண்மை. ஆனால் இந்த வாழ்வியல் உண்மைகளை உலகுக்கு போதித்த இந்தியாவோ, அறிந்தே கொடுத்தவிலை ராஜீவ் காந்தி முதல் முத்துக்குமார் வரை உள்ளிட்ட பல இன்னுயிர்கள். அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமான சிங்கள இனவெறி பிடித்தவர்களை விரல்விட்டு எண்ணிப்பார்த்தால் ஐநூறு பேருக்கும் அதிகமாயிராது. இவர்கள், அப்பாவி சிங்களர்களை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்பி ஈன அரசியலின் மூலம் குளிர்காய்ந்து லட்சக்கணக்கான தமிழர்களையும் சிங்களமக்களையும் கொன்று அவர்கள் ரத்தத்தில் தினம் குளித்து எல்லாவித சுகபோகங்களிலும் திளைக்கின்ற இவர்களே உண்மை குற்றவாளிகள்! போர்க்குற்ற விசாரணை இவர்களை நோக்கியே திரும்ப வேண்டும்.
போர்க்குற்ற விசாரணை
போர்க்குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றால், விசாரணைக்கு தயங்குவதும், தடையேற்படுத்துவதும் ஏன்? அப்படி தடையேற்படுத்தியதிலிருந்தே 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதிவரை வரை நடந்தது, தீவிரவாத ஒழிப்பு அல்ல; சம உரிமை கோரும் தமிழ்மக்கள் மீது திட்டமிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் என்றும் ஈழப்போருக்குப்பின் தமிழர்களுக்கு உதவ வந்த சர்வதேச சங்கங்களை கெடுபிடிகளுக்குள்ளாக்கி (ஐ.நா உட்பட) துரத்தியடித்ததெல்லாம் அடிமைப்பட்ட தமிழர்களின் மீதான புத்திசாலித்தனமான இன ஒதுக்கலை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளவேயன்றி வேறொன்று மில்லை என்றுதானே பொருள்?
இன்று இலங்கைமீது போர்க்குற்றவிசாரணை என தீர்மானம் கொண்டுவந்தால், அன்று எதிர்த்த நாடுகளில் பெரும்பாலானவை இன்று ஒதுங்கிக்கொள்ளும் நிலை உருவாகிவருகிறது. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளே இதற்கு பின்னணியில் இருக்கும் அளவுக்கு அடக்குமுறை அரசியலை ஆளும் கட்சி செய்துவருகிற தென்பதற்கு பத்திரிக்கையாளர்கள் மீதான தொடர் தாக்குதலும், சேவை அமைப்புகளை பந்தாட்டமாடுவதுமே சாட்சி.
போஸ்னியாவிலும், கொசோவோவிலும் ஐ.நாவின் செயலற்ற நிலைப்பாடே, தவிர்த்திருக்க வேண்டிய இனப்படுகொலைகளுக்கு மூலகாரணமானது என்பதை யாரும் மறந்து விடமுடியாது. அமெரிக்கா தலைமையிலான நேடோ தன்னிச்சையாக துரித நடவடிக்கையில் இறங்கியதால், காலம் கடந்தாவது மேற்கொண்டு நடக்கவிருந்த படுகொலைகளை நிறுத்தமுடிந்தது.
தெற்கு ஆசியாவில் இந்தியாதான் வலியவனும் பெரியவனும் கூட. நம் நாட்டின் பலமும்,வலிமையும் மக்களாட்சியும் கூட்டாட்சி தத்துவமும் நமக்களித்த மகத்துவம். உலக சமுதாயத்தில் சமதர்மத்தை பேண இந்த வலிமைதான் தேவை. ஆனால் நாமோ, நமது சுயநல சிந்தனைகளிலிருந்து விடுபடமுடியாமல், அந்த இடத்தை மற்றவர்க்கு விட்டுக்கொடுக்க முடிவுசெய்து விட்டது போல் தான் தெரிகிறது. ஒருவேளை இலங்கைக்குக்கூட அந்த எண்ணம் இருக்கலாம். இன்னும் விழித்துக்கொள்ள வில்லையெனில், மையான்மார்கூட இந்தியப்பெருங்கடலில் கொரிய கூட்டமைப்போடு காலூன்றும் நிலைவரலாம்.
கொஞ்சிகுலவும் காட்டுதர்பாரும் காந்தியமும்
இறுதி ஈழப்போர்வரையிலான காலகட்டத்தில் தனி மனிதர்களும், அமெரிக்கா போன்ற பயப்பிராந்திகொண்ட நாடுகளும் தங்கள் பழியையும், வெறியையும், அச்சத்தையும் தீர்த்துக்கொண்டனர். ஈழப்போருக்கு பிற்பட்ட காலகட்டத்தில் இனவெறிகும்பலும் அதற்கு துணைபோகும் சுய நல கும்பல்களும் தனது தினவை தீர்த்துக்கொள்கின்றது. காட்டு மிராண்டிகளுக்கும் சுயநலவெறியர் களுக்கும் புத்ததர்மமும், சமதர்ம்மும் எங்கே புரியப்போகிறது? புத்த விஹாரங்கள் மன விகாரம் படைத்த சிங்கள இனவெறியர்களின் ஆளுமையில் இருப்பதை புத்தன்தான் விரும்புவானா? இந்த காட்டுமிராண்டிகளிடமும் சுய நல வெறியர்களிடமும் இனி காந்தியம் எடுபட்டால் என்ன எடுபடாமல் போனால்தான் என்ன என்றல்லவா மரத்தடியிலும், சிறைக்கொட்ட டிகளிலும் சித்திர வதைகளை தினம் அனுபவித்துவரும் தமிழர்கள் மனம் விரக்தியடையும்? காந்தி உலகிற்கு போதித்தது மிக மிக உயர்ந்த தத்துவம். இந்திரா அம்மையார் வலிமையான பாரதத்தை உருவாக்கினார். ஆனால் இன்றோ நமது ஆட்சியாளர்களுக்கு காந்தியமும் புரியவில்லை, சமதர்ம உரிமைகளை எப்படி மதிப்பது என்பதும் புரியவில்லை. காரணம் சுய நலமே!
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடைபெறும் ஆட்சி
மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடைபெறும் ஆட்சி என்றுதான் நாமெல்லாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். மக்களாட்சியில் சமதர்மமும், சுதந்திரமும் இரு கண்கள். சமதர்ம அடிப்படையிலான உரிமைகளை கேட்டது ஈழத்தமிழரின் தவறென்றால், அது கிடைக்காமல் போன வெறுப்பில் சுதந்திரஈழம் கேட்டது தவறென்றால், அமெரிக்காவும் ஒரு தீவிரவாத நாடு என்றே பொருளாகிறது. அதுமட்டுமல்ல, வெள்ளை ஆதிக்கசக்திகளிடம் காந்தி முழுசுதந்திரம் வேண்டும் என்று கேட்டதே தீவிரவாதம் என்றாகிறதல்லவா? மக்களாட்சியின் மகத்துவமும், செயல்படும் தன்மைகளும் பெரும்பாலான சிங்களர்களுக்கும் இன்னும் பல சர்வதேச அரசியலாளர்களுக்கும் புரியாத மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விஷயம். இதைத்தான் Animal Instinct என்கின்றோம். மனிதன் இன்னும் விலங்குணர்வோடு தான் இருக்கிறான். அதிலிருந்து விடுபடவில்லை என்பதையே காட்டு மிராண்டிகளுக்கு துணைபோவது காட்டுகிறது.
வல்லரசு என்பது கனவா?
ஏன் நமக்கும்தான் மக்களாட்சியின் தனித்தன்மைகள் பிடிபடவில்லை.இந்தியா உலகின் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களாட்சியின் கூறுகளை நாம் நன்கு புரிந்திருந்தால் சுதந்திரம் வாங்கிய இருபது-முப்பது வருடங்களிலேயே அடைந்திருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக வல்லரசு என்ற தகுதியை -உலகில் நமக்கு மட்டுமே அதற்கான எல்லா வாய்ப்புகளும், தகுதிகளும் அதிகமாய் இருந்தும் -அதைத்தொலைத்துவிட்டு, நாம் இன்னும் லட்சக்கணக்கான கோடிகளில் கடன் சுமையை சுமந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலைக்கு காரணம் அன்றிலிருந்து இன்றுவரை நம்மிடம் தேச பக்தியும் பொதுநலன் நோக்கும் இல்லாமல் போனதுதான்! தேச பக்தி நம்மிடம் காலூன்றும்வரை நாம் பலகீனமானவர்களே! அடிப்படைவாதிகள் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தினாலும், சிங்களன் சாவதானமாக தமிழக கடற்கரைக்கு வந்து சிகரெட் வாங்கி சென்றாலும் இரண்டையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் வேலையை பார்க்கும் அடிமைக்குணம் மாறாது. மாறினால், அடுத்த இருபதாண்டுகளில் நாம்தான் உலகின் ஜனநாயக நாடுகளின் முடிசூட்டப்பட்ட சக்கரவர்த்தி. காட்டுமிராண்டிகளை அடக்கும் வல்லமைதானாக வந்து சேரும்- மு.ரா
Saturday, December 4, 2010
சிங்கள இன வேறி இன்னும் அடங்கியபாடில்லை
இலங்கை
AFP
AFP, 24.11.2010-ல் வெளியிட்ட படம்
மேற்காணும் நிழற்படம் நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்டு நவம்பர் 24-ல் வெளியிடப்பட்டது. மன்னார் பகுதியில் சிங்கள ராணுவம் போர் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழர் உரிமைப் போராட்டம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்ட நிலையில், யாரை எதிர்த்து போரிட இந்த கடுமையான பயிற்சி? இலங்கைக்கு எதிரிநாடுகளோ அல்லது உள்நாட்டில் குறைந்தபட்சம் மனித உரிமைக்குக்கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து வாடிவதங்கி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் இன்னும் எதற்காக இந்த போர்ப்பரணியும் போர்ப்பயிற்சியும்?
தற்சமயம் இந்த போர்ப்பயிற்சி தமிழ் மக்களை பயமுறுத்தி என்றும் அடிமையாக வைத்திருக்க சிங்கள இனவாத அரசுக்கு உதவியாக இருக்கலாம். ஒருவேளை உலகம் தன் தூக்கத்தை தொலைத்துவிட்டு எழுந்து நின்று தமிழரின் மனித உரிமைபோராட்ட்த்திற்கு குரல் கொடுத்துவிட்டால் அதை‘சமாளிக்க தேவையான’ பயிற்சியாகக்கூட இருக்கலாம். எதிர்கால நிகழ்வுகளை யார் கணிக்கக்கூடும்?
இளைஞர்கள் அனைவரும் சிறைக்கொட்டடிகளில்! முதியவர்களும் பெண்களும் குழந்தைகளும் இப்போது மீள்குடியேற்றப்பட்டவர்கள். வேடிக்கையாக இருக்கிறது! தமிழர்களின் சமவாழ்வுரிமைக்கான போர், 2009-ல் முடிவுக்கு வந்த பின்னர் 3,00,000-த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வளையம் என்று பெயரிடப்பட்ட சிறைக்கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானவர் கடந்த ஒரு வருட காலத்தில் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டார்கள் என்று இனவாத சிங்களர்கள் சொல்கிறார்கள். இந்த மீள்குடியேற்ற ப்பட்டவர்கள் வேறு யாருமல்ல. வயதான முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும்தான். இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த நிலங்களையும் பிடுங்கிக்கொண்டு சிங்கள கொள்ளை வாத அரசு அவர்களை நடுத்தெருவிலும், மரங்களுக்கு அடியிலும் தள்ளிவிட்டுவிட்டது. இவர்கள் உயிர் பிழைக்க எப்படியெல்லாம் அவலங்களை தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளியில் யாரும் அறியாவண்ணம் அனைத்து சர்வதேச உதவி நிறுவனங்களையும் வெளியேற்றிவிட்டது.
வடபகுதியில் தமிழர்கள் நிலங்களை பிடுங்கி சிங்களர்களுக்கு வாரி வழங்கும் செயல் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரான செயல். மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் குற்றங்களைப்பற்றிய தகவல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சேகரிக்கின்றதோ என்ற அச்சத்தில் முதலில் கிழக்கு ஈழப்பகுதியிலிருந்து அவர்களை விரட்டியது. தமது மனித உரிமை மீறல் பணிகளை செவ்வனவே நிறைவேற்றிக்கொள்ள வசதியாக கடந்த வாரத்தில் வடக்குப்பகுதியிலிருந்தும் செஞ்சிலுவை சங்கத்தை உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டிருப்பது, ராமர் பேட்டியெடுத்தலென்ன ராவணன் சிலைகளை உடைத்தாலென்ன சிங்களப்பேரின வாதத்தை ஆசியாவில் பெரும் சக்தியாக உருவெடுக்கவைப்போம் என்று சபதம் செய்துவிட்டதுபோல்தான் தோன்றுகிறது.
“அக்கம் பக்கத்து நாடுகளில் மனித உரிமை மீறப்படும்போது இந்தியா கண்ணை கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்கிற ரீதியில் அமெரிக்க அதிபரான ஒபாமா பாரதம் வந்திருந்த வேளையில் சொல்லிவிட்டு போனார். இனியும் பாரத அரசு கண் மூடி வழக்கம் போல் விவசாய கருவிகள் உதவி, வீடு கட்டுவதற்கு உதவி என அறிவிப்புகளை செய்துகொண்டிருந்தால், பாதுகாப்பு கவுன்சில் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்!
போர்குற்றங்களுக்கான விசாரணை இருவகையாக நடத்தப்பட வேண்டும்
1. 2009 –மே மாதம் வரையிலான தமிழர்பகுதிகள் மீதான தாக்குதல்
2. 2009- மே மாதத்திற்கு பிறகு விசாரணை நடத்தப்படும் நாள் வரை நடந்த தமிழர் மீதான மனித உரிமை மீறல்கள்
விசாரணை சுதந்திரமாக தமிழர்பகுதியிலேயே நடத்தப்படவேண்டும். சிங்கள இனாவாத அரசால் அல்ல! சர்வதேச சமூகத்தால். விசாரணைக்குப்பிறகு பத்துப்பேரை கைது செய்து இரண்டு பேருக்கு வாழ்நாள் சிறை என்று தீர்ப்பு மைந்து விடக்கூடாது. விசாரணை இருபது முப்பது வருடங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடாது. தமிழர் உரிமைப்போரை மண்ணோடு மண்ணாக்குவதில் எப்படி சர்வதேச சமூகமும் தீவிரம் காட்டியதோ அது போன்றே விசாரணையின் வேகமும், தீவிரமும் அமைய வேண்டும். ஏனெனில், பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு வளர்த்துவிட்டது இலங்கைத்தமிழர் அல்ல!
இலங்கை வாழட்டும்! ஆனால் மனித உரிமைகளை பல ஆண்டுகளாக குழி தோண்டி புதைத்து வரும் சிங்கள இனவாதம் அழியட்டும்!
Subscribe to:
Comments (Atom)
