Saturday, December 4, 2010

சிங்கள இன வேறி இன்னும் அடங்கியபாடில்லை


இலங்கை

AFP
AFP, 24.11.2010-ல் வெளியிட்ட படம்
                மேற்காணும் நிழற்படம் நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்டு  நவம்பர் 24-ல்  வெளியிடப்பட்டது. மன்னார் பகுதியில் சிங்கள ராணுவம் போர் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழர் உரிமைப் போராட்டம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுவிட்ட நிலையில், யாரை எதிர்த்து போரிட இந்த கடுமையான பயிற்சி? இலங்கைக்கு எதிரிநாடுகளோ அல்லது உள்நாட்டில் குறைந்தபட்சம் மனித உரிமைக்குக்கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து வாடிவதங்கி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் இன்னும்  எதற்காக இந்த போர்ப்பரணியும் போர்ப்பயிற்சியும்?
தற்சமயம் இந்த போர்ப்பயிற்சி தமிழ் மக்களை பயமுறுத்தி என்றும் அடிமையாக வைத்திருக்க சிங்கள இனவாத அரசுக்கு உதவியாக இருக்கலாம். ஒருவேளை உலகம் தன் தூக்கத்தை தொலைத்துவிட்டு எழுந்து நின்று தமிழரின் மனித உரிமைபோராட்ட்த்திற்கு குரல் கொடுத்துவிட்டால் அதைசமாளிக்க தேவையான பயிற்சியாகக்கூட இருக்கலாம். எதிர்கால நிகழ்வுகளை யார் கணிக்கக்கூடும்?
      இளைஞர்கள்  அனைவரும் சிறைக்கொட்டடிகளில்! முதியவர்களும் பெண்களும் குழந்தைகளும் இப்போது மீள்குடியேற்றப்பட்டவர்கள். வேடிக்கையாக இருக்கிறது!  தமிழர்களின் சமவாழ்வுரிமைக்கான போர், 2009-ல் முடிவுக்கு வந்த பின்னர் 3,00,000-த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வளையம் என்று பெயரிடப்பட்ட சிறைக்கொட்டடிகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானவர் கடந்த ஒரு வருட காலத்தில்  சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டார்கள் என்று இனவாத சிங்களர்கள் சொல்கிறார்கள்.  இந்த மீள்குடியேற்ற ப்பட்டவர்கள் வேறு யாருமல்ல. வயதான முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும்தான். இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த நிலங்களையும் பிடுங்கிக்கொண்டு சிங்கள கொள்ளை வாத அரசு அவர்களை நடுத்தெருவிலும், மரங்களுக்கு அடியிலும் தள்ளிவிட்டுவிட்டது. இவர்கள் உயிர் பிழைக்க எப்படியெல்லாம் அவலங்களை தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளியில் யாரும் அறியாவண்ணம் அனைத்து சர்வதேச உதவி நிறுவனங்களையும் வெளியேற்றிவிட்டது.
      வடபகுதியில் தமிழர்கள் நிலங்களை பிடுங்கி சிங்களர்களுக்கு வாரி வழங்கும் செயல் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரான செயல். மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் குற்றங்களைப்பற்றிய தகவல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சேகரிக்கின்றதோ என்ற அச்சத்தில் முதலில் கிழக்கு ஈழப்பகுதியிலிருந்து அவர்களை விரட்டியது. தமது மனித உரிமை மீறல் பணிகளை செவ்வனவே நிறைவேற்றிக்கொள்ள வசதியாக கடந்த வாரத்தில் வடக்குப்பகுதியிலிருந்தும் செஞ்சிலுவை சங்கத்தை உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டிருப்பது, ராமர் பேட்டியெடுத்தலென்ன ராவணன் சிலைகளை உடைத்தாலென்ன சிங்களப்பேரின வாதத்தை ஆசியாவில் பெரும் சக்தியாக உருவெடுக்கவைப்போம் என்று சபதம் செய்துவிட்டதுபோல்தான் தோன்றுகிறது.
அக்கம் பக்கத்து நாடுகளில் மனித உரிமை மீறப்படும்போது இந்தியா கண்ணை கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்கிற ரீதியில்    அமெரிக்க அதிபரான ஒபாமா பாரதம் வந்திருந்த வேளையில் சொல்லிவிட்டு போனார். இனியும் பாரத அரசு கண் மூடி வழக்கம் போல் விவசாய கருவிகள் உதவி, வீடு கட்டுவதற்கு உதவி என அறிவிப்புகளை செய்துகொண்டிருந்தால், பாதுகாப்பு கவுன்சில் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்!
போர்குற்றங்களுக்கான விசாரணை இருவகையாக நடத்தப்பட வேண்டும்
1.      2009 –மே மாதம் வரையிலான தமிழர்பகுதிகள் மீதான தாக்குதல்
2.      2009- மே மாதத்திற்கு பிறகு விசாரணை நடத்தப்படும் நாள் வரை நடந்த    தமிழர் மீதான மனித உரிமை மீறல்கள்
      விசாரணை சுதந்திரமாக தமிழர்பகுதியிலேயே நடத்தப்படவேண்டும். சிங்கள இனாவாத அரசால் அல்ல! சர்வதேச சமூகத்தால். விசாரணைக்குப்பிறகு பத்துப்பேரை கைது செய்து இரண்டு பேருக்கு வாழ்நாள் சிறை என்று தீர்ப்பு மைந்து விடக்கூடாது. விசாரணை இருபது முப்பது வருடங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடாது. தமிழர் உரிமைப்போரை மண்ணோடு மண்ணாக்குவதில்  எப்படி சர்வதேச சமூகமும் தீவிரம் காட்டியதோ அது போன்றே விசாரணையின் வேகமும், தீவிரமும் அமைய வேண்டும். ஏனெனில், பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு வளர்த்துவிட்டது இலங்கைத்தமிழர் அல்ல!
இலங்கை வாழட்டும்! ஆனால் மனித உரிமைகளை பல ஆண்டுகளாக குழி தோண்டி புதைத்து வரும் சிங்கள இனவாதம் அழியட்டும்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.